ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கலெக்டர்,எஸ்பி.,

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கலெக்டர்,எஸ்பி.,
X

சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி., ஆகியோர் தங்கள் வாக்கை செலுத்தினார்கள்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடை தேர்தல் மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்புடனும் நடைபெற்று வருகிறது.காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், குருசடி பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதே போல் மாவட்ட எஸ்பி., பத்ரி நாராயணனும் தனது வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்