கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் - காற்றில் பறந்தது சமூக இடைவெளி
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக, சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் மனு அளிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிப்பதற்காக காலை முதலே ஏராளமானோர் வருகை தந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
ஒரு மனு அளிப்பதற்கு 10 முதல் 20 நபர்கள் வரை வந்த நிலையில், பல்வேறு மனுக்களை அளிக்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடி நின்றனர். பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று இருந்தாலும், பலர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடியது பாதுகாப்பு இல்லாததை காட்டியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu