கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி 'சுறுசுறு'

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி சுறுசுறு
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. 

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் தூய்மை பணி முகாம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்கள் சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் அங்கு மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி இருப்பதை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture