குமரியில் கனமழையால் கால்வாய் உடைந்து சாலை சேதம்: போக்குவரத்து நிறுத்தம்

குமரியில் கனமழையால் கால்வாய் உடைந்து சாலை சேதம்: போக்குவரத்து நிறுத்தம்
X

நாகர்கோவில் அருகே நுள்ளிவிளை பகுதியில் கால்வாய் உடைந்தது சாலை சேதமானதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

குமரியில் கனமழையால் கால்வாய் உடைந்து சாலை சேதம் ஆன நிலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையின் காரணமாக அணைகள் முழுவதுமாக நிரம்பி அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக உருவாகி செல்கின்றன, மாவட்டம் முழுவதும் 12 க்கும் மேற்பட்ட குளங்கள் அடைந்துள்ளன. மேலும் கால்வாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனிடையே நாகர்கோவில் அருகே நுள்ளிவிளை பகுதியில் கால்வாய் உடைந்ததோடு சாலையும் உடைந்தால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

நேற்று சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று கால்வாய் முழுவதுமாக உடைந்து அதில் இருந்து வெளியேறும் நீரானது அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்ததால் விளை நிலங்களில் சேதம் ஆகி உள்ளன. மேலும் மழை நீரானது ரயில்வே தண்டவாளத்தை ஆக்கிரமித்துள்ளதால் திருவந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரயில் போக்குவரத்து 2 ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!