செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்: குமரியில் அசத்தல் ஆஃபர்

செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்: குமரியில் அசத்தல் ஆஃபர்
X
குமரியில் செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என செல்போன் கடையில் செய்யப்பட்ட விளம்பரம் பொதுமக்களை கவர்ந்தது.

பொதுவாக பெரிய வர்த்தக நிறுவணங்கள் முதல் சிறு வணிக கடைகள் வரை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

விசேச காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குழுக்கள் முறையில் பரிசுகள் உள்ளிட்ட அறிவிப்புகளும் காலங்காலமாக இருந்து வருகிறது. இதனிடையே தற்போது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது பரபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இதனை மையப்படுத்தி நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள செல்போன் கடை ஒன்று புதிய செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த விளம்பரம் பொதுமக்களை கவர்ந்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா