அதிமுக ஆட்சி அரைகுறை ஆட்சி - மு.க. ஸ்டாலின்

அதிமுக ஆட்சி அரைகுறை ஆட்சி -  மு.க. ஸ்டாலின்
X

அதிமுக ஆட்சி ஒரு அரைகுறை ஆட்சி என நாகர்காேவிலில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.அதன்படி நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 12 பேருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் குறைகளை கேட்டார். அப்போது ஒவ்வொருவராக தங்கள் குறைகளைக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு மின்சாரம், குடிநீர், பட்டா, வேலைவாய்ப்பு என பல்வேறு பிரச்சனை இருக்கும். திமுக ஆட்சி வந்ததும் அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும் என நினைப்பவன் நான்.ஜெயலலிதா இறந்த போது அதிமுகவில் இருந்து பலர் எங்களுக்கு தூது விட்டனர். அவர்களை பற்றி நான் சொல்லவில்லை. அது நாகரீகம் அல்ல. அதிமுக ஆட்சி ஒரு அரைகுறை ஆட்சி. இந்த ஆட்சி தமிழ்நாட்டை கெடுத்து வருகிறது. எடப்பாடி தன்னை முதல்வர் என்று கூறுவார். ஆனால் அவரை கட்சியில் உள்ளவர்கள் கூட மதிக்க மாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டம் கடந்த தேர்தலில் திமுகவிற்கு கொடுத்த வெற்றியை இந்த முறையும் கொடுக்க வேண்டும். திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!