மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வருகிற 5-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷபூஜை நடக்கிறது. 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டுவருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத் தேர் உலா, 6-8 மணிக்கு ஸ்ரீ ராஜராஜேஷ்வரி பூஜை, 10,001 திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறவுள்ளது.
கலை நிகழ்ச்சிகளாக 5-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்மிக சமய மாநாடு நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞான சேகர் வரவேற்கிறார். குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகிக்க, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன், மனோதங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகின்றனர்.
விஜய்வசந்த் எம்.பி. பிரின்ஸ் எம்.எல்.ஏ, நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக் காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணை தலைவர் சுஜி ஆகியோரும் பேசுகின்றனர். சுகிசிவம் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்.
விழாவில் கணவரை இழந்து வாழும் 50 ஏழை இந்து பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவித்தொகை, பெற்றோரை இழந்து வாழும் ஏழை இந்து மாணவர்கள் 100 பேருக்கு உதவித் தொகை ஆகியன வழங்கப்படுகிறது. கோவில் மேல்சாந்தி பகவதி குருக்கள் நன்றி கூறுகிறார்.
மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசையும், இரவு 8 மணிக்கு பக்தி நெறி நன்கு வளர்த்துள்ளது. வளர வேண்டும் என்ற தலைப்பில் சுகிசிவம் நடுவராக கொண்டு வழக்காடு மன்றம் நடக்கிறது. விஜயசுந்தரி, ராஜாராம் ஆகியோர் பேசுகின்றனர்.
2-ம் நாள் விழா மார்ச் 6-நம் தேதி காலை 4.30 மணிக்கு நடை திறப்பு. 5 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத் தேர் உலா, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு நடைபெறும் சமய சொற்பொழிவில் அம்பாள் பெருமை பற்றி கார்த்திகா ராஜா பேசுகிறார். இரவு 8-க்கு பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
3-ம் நாள் விழா 7-ம் தேதி காலை 4.30 மணிக்கு திரு நடைதிறப்பு, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பகல் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 5.30 மணிக்கு பௌர்ணமி திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கத்தேர் உலா. இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சிவசங்கரின் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு கதகளி ஆகியன நடக்கிறது.
4-ம் நாள் விழா 8-ம் தேதி காலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 12 மணிக்கு சந்தன குட பவனி, 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, மாலை 6.15 மணிக்கு சந்தனக்குட பவனி, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சமய சொற்பொழிவில் தேச மங்கையர்கரசி பேசுகிறார். இரவு 8 மணிக்கு மகதி குழுவினரின் கர்நாடக மற்றும் பக்தி இன்னிசை நடக்கிறது.
5-ம் நாள் விழா 9-ந் தேதி காலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுத்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கோமதி திருநாவுக்கரசுவின் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம் ஆகியன நடக்கிறது.
6-ம் நாள் விழா 10-ந் தேதி காலை 6.30-க்கு உஷ பூஜை, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பகல் 12 மற்றும் 12.30க்கு சந்தன குட பவனி, 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 தங்கத்தேர் உலா, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு மேல் 12-க்குள் வலியபடுக்கை பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சிவசங்கரின் சமய சொற்பொழிவு, இரவு 8-க்கு வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இன்னிசை ஆகியன நடக்கிறது.
7-ம் நாள் விழா 11-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக் கில் எழுந்தருளல், பகல் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6-க்கு தங்கத்தேர் உலா, இரவு 7-க்கு சிறப்பு வில்லிசை, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் ராஜா ராம் பேசுகிறார். இரவு 8 மணிக்கு இளசை சண்முகம் குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிறது.
8-ம் நாள் விழா 12-ம் தேதி காலை 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக் கில் எழுந்தருளல், 12.30-க்கு மாவிளக்கு பவனி வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளல் நடக்கிறது. மாலை 6.30-க்கு கோமதி திருநாவுக் கரசு சமய சொற்பொழிவு, இரவு 8-க்கு சுசித்ரா பால சுப்பிரமணியனின் பக்தி இன்னிசை சொற்பொழிவு ஆகியன நடக்கிறது.
9-ம் நாள் விழா 13-ம் தேதி காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 11 மணிக்கு சந்தனகுட பவனி, பகல் 12 மணிக்கு சந்தனகாப்பு காவடி, பகல் 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி பவனி வருதல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30- மணிக்கு சமயசொற்பொழிவில் மோகன சுந்தரம் பேசுகிறார். இரவு 8 மணிக்கு ஆய்க்குடி குமார் குழுவினரின் பஜன்ஸ் நடக்கிறது.
10-ம் நாள் விழா 14-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், அதிகாலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணி முதல் குத்தியோட்டம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது.
இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், இரவு 12. மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக் கோவிலுக்கு கொண்டு வருதல், இரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30- மணிக்கு சுந்தரராமின் சமய சொற்பொழிவு. இரவு 8 மணிக்கு ஹரி கதை மற்றும் இன்னிசை விருந்து ஆகியன நடக்கிறது.
8-ம் கொடை விழா மார்ச் 21-ம் தேதி சிறப்பு பூஜையுடனும், மார்ச் 25-ந் தேதி மீனபரணி கொடை விழா வலியபடுக்கை பூஜை யுடனும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu