கிள்ளியூர்:அலுவலகம் திறக்கும் முன்பே தீர்ந்து போன தடுப்பூசி டோக்கன்
கிள்ளியூர் மருத்துவமனை அலுவலகம் திறக்கும் முன்பே தீர்ந்து போன தடுப்பூசி டோக்கன்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் முகாம்கள் குறைக்கப்பட்டு மருந்துகளும் குறைந்த அளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்த டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே மருத்துவமனை வளாகத்தில் குவிய தொடங்கினர்.
ஆனால் அங்கு வந்த மக்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடையும் வகையில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது அதில் டோக்கன் அனைத்தும் முடிந்து விட்டது என்று இருந்தது.
இன்றைய தினம் 220 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனை அலுவலகம் திறக்கப்படாத நிலையில் எப்படி டோக்கன் தீரும் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை திரும்பி போக செய்தனர், ஏற்கனவே இதே மருத்துவமனையில் தடுப்பூசி பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் இச்சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu