கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர் சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் போலீசார் திரித்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் வாலிபர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.

அப்போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கபட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் களியக்காவிளை பகுதியை சேர்ந்த யாசர் (25) முஸ்தபா (30) அர்ஷாத் (20) என்பது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!