/* */

குமரிக்கு வருகை தந்த முதல்வர் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

குமரிக்கு வருகை தந்த முதல்வர் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரிக்கு வருகை தந்த முதல்வர் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது
X

டீ மாஸ்டர் பாஸ்கர்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் வாகனம் வரும்போது, அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் சில்வர் கிளாஸ் ஒன்றை எறிந்துள்ளார்.

இதையடுத்து பணகுடி போலீசார் டீ மாஸ்டர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் முதல்வர் வரவேற்பு இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த கடை இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

கடையில் தேநீர் குடிக்க கூடியிருந்த மக்கள் மற்றும் முதல்வரை காண கடை வாசலில் கூடியிருந்த மக்களை அங்கிருந்து செல்லும்படி காவல்துறையினர் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் கடை விற்பனை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த டீ மாஸ்டர், முதல்வர் சென்ற கார் மீது டம்ளரை வீச முயன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On: 8 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க