சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை
X
சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அன்றாட நிகழ்வுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மீன் மார்க்கெட்டுகள், மீன் கடைகள், கோழி கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை அன்று செயல்பட அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமைகளில் எந்த ஒரு இறைச்சிக் கடைகளும் செயல்பட அனுமதி இல்லை. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்