/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் 183 போலீசாருக்கு சேமநல நதி

குமரி போலீசாரின் சேமநல நிதி ரூபாய் 35,83,367 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் 183 போலீசார் பயன் அடைந்தனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் 183 போலீசாருக்கு சேமநல நதி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குழந்தை பிறப்பு மருத்துவமனை செலவு, திடீர் மருத்துவ சிகிச்சை செலவு, குடும்ப உறுப்பினர்களின் இறப்பின் ஈம சடங்கு செலவு போன்றவற்றை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து பெற்றுதர விண்ணப்பித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முயற்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து 2019-2020 ஆண்டிற்கான ரூபாய் 35,83,367 முழு தொகையினையும் அனுமதித்து தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து காவலர்களுக்கு வழங்கினார், இதன் மூலம் 183 காவலர்கள் பயனடைந்துள்ளனர் .

மேலும் 2019-2020 ஆண்டு வரை சேமநல நிதி சம்பந்தமான நிலுவையிலிருந்த காவலர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் நிலுவையில் இல்லாமல் நிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Feb 2022 12:15 AM GMT

Related News