போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர்கள் கைது

போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர்கள் கைது
X
குமரியில் போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பீச்ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் அருகுவிளை பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம்(44) மற்றும் வெங்கடேஷ்(29) என்பது தெரியவந்தது.

தீவிர விசாரணையில், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போன்று, கொற்றிக்கோடு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேர்கிளம்பி பகுதியில் உள்ள சஜீர்(34) என்பவரின் கடையை சோதனை செய்தனர். அப்போது, அவர் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தார். அவர் பதுக்கி வைத்திருந்த 988 பாக்கெட் புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!