நீண்ட நாட்களுக்கு பிறகு குமரியை குளிர்வித்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

நீண்ட நாட்களுக்கு பிறகு குமரியை குளிர்வித்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமரி மாவட்டத்தில் பெய்த மழையால், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குமரியை குளிர்வித்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயில், பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் பெரும் சிரமம் அடைய செய்தது. இந்த நிலையில் நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும், இன்று பிற்பகல் முதல் பரவலான மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக வெப்பம் முழுமையாக தணிந்து, குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது, மேலும் மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலாக மழை நீடித்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, முக்கடல் அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனிடையே, தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேவை நிவர்த்தி ஆவதோடு விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india