குமரியில் வீட்டின் ஒரு பகுதி திடீர் மாயம், தொழில் அதிபர் மீது புகார்

குமரியில் வீட்டின் ஒரு பகுதி திடீர் மாயம், தொழில் அதிபர் மீது புகார்
X

குமரியில் தொழில் அதிபரால் இடித்து தள்ளப்பட்ட பெண்ணின் வீடு

குமரியில் வீட்டை இடித்து தள்ளி தொழில் அதிபர் மீது பெண் போலீசில் புகார் செய்தார். இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த முழுக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூடோடு பகுதியை சேர்ந்த தாழ்த்தபட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் மஞ்சு, இவரது தந்தை நோய்வாய்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதைதொடர்ந்து ஒருவருடத்திற்கு முன்பு உடன் பிறந்த சகோதரரையும் விபத்தில் இழந்து தாயுடன் வசித்துவந்த பெண்ணிற்கு பேரிடியாக கொரோனா நோய் தாக்கத்தால் தாயையும் இழந்து கணவனுடன் கேரளாவிற்கு தங்குவேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டை அப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீபன் மன்றும் அவரது மகன் ஷிபின் அத்துமீறி நுழைந்து வீட்டின் கழிவறை மற்றும் வீட்டின் ஒரு பகுதியை இடித்து கருங்கற்களால் அடையாளம் தெரியாத அளவிற்கு காம்பவுண்டு சுவர் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவிற்கு சென்றிருந்த மஞ்சு ஊர் திருப்பிய போது தன்னுடைய வீட்டின் ஒரு பகுதி இடிக்கபட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைத்தார், தொடர்ந்து ஊர்மக்கள் உதவியுடன் அருமனை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக தெரிகிறது, இதனை தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு ஆன் லைன் மூலம் புகார் அளித்த மஞ்சு தாய்தந்தை காலத்திலிருத்தே தான் வசித்து வந்த வீட்டை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு ஒரு பகுதியை இடித்த தொழிலதிபர் ஸ்டீபன் மன்றும் அவரது மகன் ஷிபின் மீதுநடவடிக்கை எடுத்து தன்னுடைய வீட்டை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கைவைத்தார்

Tags

Next Story