வேரோடு சாய்ந்து விழும் நிலையில் மரங்கள் - பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

வேரோடு சாய்ந்து விழும் நிலையில் மரங்கள் - பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
X
குமரியில் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மரங்களை பாதிப்பு ஏற்படும் முன் மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் கிராமத்திற்கு உட்பட்ட கண்ணங்கரிச்சை பகுதியில் நெய்யாறு இடதுகரை சானல் ஓரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை, மா உள்ளிட்ட 4 மரங்கள் வேரோடு சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

இந்த மரங்கள் சாய்ந்து விழுந்தால் எதிரே உள்ள மின்கம்பம் சார்வதோடு 13 மின்கம்பங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது மேலும் தாழ்வான பகுதியில் உள்ள அடுத்தடுத்து உள்ள குடிசை வீடுகளும் உடைந்து போகும் அபாயம் உள்ளது.

இது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் சேர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் பலமுறை புகார் அளித்துள்ளனர் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பெய்த தொடர் மழையில் நில அரிப்பு ஏற்பட்டு மரத்தின் வேர்கள் அனைத்தும் வெளியே தெரிந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் நிற்கிறது.

விபத்துகள் பாதிப்புகள் ஏற்படும் முன் முற்றிலுமாக சாய்ந்து இருக்கும் இந்த மரங்களை பாதுகாப்பான முறையில் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!