ஒரே நாளில் 18070 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

ஒரே நாளில் 18070 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 18070 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடக்க காலத்தில் தடுப்பூசி குறித்த தவறான பார்வையால் ஆளே இல்லாமல் இருந்த தடுப்பூசி மையங்களில் தற்போது டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசியை பிரித்து மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 43 முகாம்கள் மூலமாக 12870 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 14 மையங்கள் மூலமாக 5200 கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன.

ஒவ்வொரு மையங்களிலும் இருப்பின் அளவை பொறுத்து 200 முதல் 300 வரை டோக்கன் வினியோகிக்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில் வரும் காலங்களில் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil