கன்னியாகுமரி: மாஸ்க் போடாத 1780 பேரிடம் அபராதம் வசூல்

கன்னியாகுமரி: மாஸ்க் போடாத 1780 பேரிடம் அபராதம் வசூல்
X
குமரியில் முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டிய 1780 நபர்களுக்கு அபராதம் - போலீசார் நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் என உத்தரவு பிறப்பித்து உள்ளது,

சுகாதார துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதித்து வந்தாலும் பலர் அலட்சியதுடன் செயல்பட்டதால் காவல்துறையினரும் சோதனைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முதல் காவல்துறையினரும் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்,

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டிய 1780 நபர்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் அவர்களுக்கு நோய் பரவல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா