வெள்ளக்காடானது குமரி - போக்குவரத்து துண்டிப்பு: மாவட்ட நிர்வாகம் 'கொர்ர்..'
கனமழையால் அருமநல்லூர் கிராமத்தில் சூழந்துள்ள வெள்ளம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையானது பல மணி நேரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக கோதையாறு, திற்பரப்பு, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக மழைநீர் செல்கிறது. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளத்தோடு, காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள், சாலைகள் மூழ்கியதால் குமரியில் 12 மலை கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன.
இதேபோல், களியல், குலசேகரம் உள்ளிட்ட 7 ஊர்களுக்கான பொது போக்குவரத்து முடங்கி உள்ளது; கோதையாறு காட்டாற்று வெள்ளத்தால் அருமநல்லூர், தெரிசனன்கோப்பு, ஞானம், உட்பட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 150 ஏக்கர் நிலபரப்பிலான வாழை, தென்னை மற்றும் ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் கோதையாறு திருநந்திக்கரை உள்ளிட்ட பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளடு. இதனிடையே, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu