குமரியில் தூக்கில் மீனவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை

குமரியில் தூக்கில் மீனவர் சடலம் - காவல்துறையினர் விசாரணை
X
குமரியில், தூக்கில் மீனவர் சடலம் காணப்பட்ட நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மீனவ கிராமத்தில் சுரஜ் என்பவர், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவர், நேற்று மதியம் உணவு அறிந்திய பிறகு, தூங்குவதற்காக அறையில் சென்றார். மாலை ஆன பின்பும், கதவு திறக்காததால் சந்தோகம் அடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கம் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுரஜ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கருங்கல் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!