குமரி மாவட்டத்தில் 12 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி: முதியவர்கள் அவதி

குமரி மாவட்டத்தில் 12 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி: முதியவர்கள் அவதி
X
தடுப்பூசி மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய முதியவர்கள், இணை நோய் கொண்டவர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்த ஆன் லைன் டோக்கன் முறை மற்றும் நேரடி டோக்கன் முறைகள் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி இருப்பை தெரிந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், குமரி மாவட்டத்திற்கு 12330 டோஸ் கோவி ஷீல்டு மற்றும் 3080 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் 10 மையங்கள் மூலமாக ஆன் லைன் முறையிலும் 74 மையங்கள் மூலமாக நேரடியாகவும் டோக்கன் பெற்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதில், கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் டோஸ் மட்டுமே போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் முண்டியடித்தனர். இதனால் தடுப்பூசி மையங்களில் பரபரப்பான நிலை நிலவி வந்தது, மேலும் கூட்ட நெரிசலில் சிக்கிய முதியவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags

Next Story