நெல்லையில் இருந்து குமரிக்கு கொரோனா தடுப்பூசி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து 3500 டோஸ் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் குமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றின் மூலம் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

3500 டோஸ் தடுப்பூசி வந்திருப்பதால் விரைவில் தீர்ந்து விடும் எனவும், அதன் பிறகு மீண்டும் தட்டுப்பாடு சூழ்நிலையே நிலவும் என்பதால், நோய் பாதிப்பின் தீவிரத்தை கருத்தில்கொண்டு குமரி மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture