குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 10 பேர் நீக்கம் -அதிமுக தலைமை அதிரடி அறிவிப்பு

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 10 பேர் நீக்கம் -அதிமுக தலைமை அதிரடி அறிவிப்பு
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் 10 பேரை அதிமுக தலைமை கழகம் அதிரடியாக நீக்கியது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி. கே.பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட அதிமுக கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 10 நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் மாடசாமி ஆகியோரும்.

தோவாளை ஒன்றிய அவைத்தலைவர் மோசஸ் ராமச்சந்திரன், வடக்கு ஒன்றிய பொருளாளர் தென்கரை மகாராஜன், தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பாலசுப்ரமணியன் என்ற சுதாகர், தோவாளை வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயந்தி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதே போன்று குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டோமினிக், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வரதராஜன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாகவும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

குமரியில் நீக்கம் செய்யப்பட்டவர்களில் 6 பேர் முக்கிய நிர்வாகிகளாக செயல்பட்ட நிலையில் அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர்கள் 10 பேர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டது மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story