ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் வாக்குவாதம்

ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் வாக்குவாதம்
X

ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குமரியில் ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு நடைபெற்ற நிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நடைக்காவு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அரசியின் அளவை குறைத்து வழங்கி அங்கு பணியில் இருந்த பணியாளர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கேட்க சென்றால் அவர்களை அவமரியாதையாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட 40 கிலோ அரிசியை வேறொரு கடையில் சென்று தூக்கி பார்த்தபோது அதில் 3 கிலோ அரிசி குறைவாக இருந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் அரிசி குறைந்ததற்க்கான காரணத்தை கேட்டு அதனை வீடியோவாக எடுத்துள்ளார் .

அப்போது அந்த ஊழியர் அப்படித்தான் இருக்கும்; வேண்டுமென்றால் அங்கு சென்று கேள் என அஜாக்கிரதையாக பதில் கூறியுள்ளார்.

இது போன்று பலரிடம் இருந்து அரிசியை குறைத்து எடுத்து வெளியே விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டும் நிலையில் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!