வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி

வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி
X

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்காண வாக்குகள் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகளை கோணம் பொறியியல் கல்லூரியிலும், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குகளை கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது . மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிக்கு 168 மேஜைகளில் வாக்குகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் முகவர்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டு உள்ளது . வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7 மணிக்கு முன்பே வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு மேஜைக்கு ஒரு கவுண்டிங் சூப்பர்வைசர், கவுண்டிங் உதவியாளரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் .

336 ஊழியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கான பயிற்சி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நான்கு கட்டமாக வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மின்னணு எந்திரத்தை கையாளுவது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கமும் பயிற்சியின் போது அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!