குமரி சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் வழங்கிய முதல்வர்

குமரி சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் வழங்கிய முதல்வர்
X
பைல் படம்.
குமரி சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதுகுதண்டு பிரச்சனை, கண்பார்வை குறைபாடு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோயால் அவதிபடும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த சிறுவன் எம்.ஸ்ரீ ஆனந்த் வயது 9, அவர்கள் தன்னுடைய சிகிச்சைக்கு உதவுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் இன்று அந்த சிறுவனிடம் அவரின் பெற்றோர்கள் முன்னிலையில் மருத்துவ செலவுக்காக ரூ.1.5 லட்சம் வழங்கினார்.

மேலும் சிறுவனுக்கு தேவையான சிகிச்சையை சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை செய்ய தமிழக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பரிந்துரைக் கடிதமும் அவர்களிடம் அளித்தார்.

Tags

Next Story