குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி

குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி
X
குமரியில் கட்டு கட்டாக தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுக்க மாவட்டம் தோறும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீசார் தனிப்படை அமைத்து வானக சோதனை உட்பட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொட்டாரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு இருந்த பொழுது அவ்வழியாக சந்தேகம் படும்படியாக கையில் பார்சலுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பதும் அங்கு பலசரக்கு கடை நடத்தி வரும் அவர் விற்பனை செய்வதற்காக பையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த நான்கு கிலோ புகையிலை மற்றும் ரொக்க பணம் பன்னிரெண்டாயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture