/* */

அனுமதியின்றி திறக்கப்பட்ட தாமிர ஆலை: கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

குமரியில் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட தாமிர ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி திறக்கப்பட்ட தாமிர ஆலை: கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
X

குளச்சல் அருகே பத்தறை கிராமத்தில் , தாமிர ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட பத்தறை கிராமத்தில், இரண்டாயிரம் ஏக்கற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இயற்கை சூழலில், அப்பகுதி மக்கள் வசித்து வந்த நிலையில், அங்குள்ள அங்கன் வாடி மையம் அருகே, தனிநபர் ஒருவர், கடந்த 2 வருடங்களுக்கு முன் கட்டிட பணிகளை தொடங்கி உள்ளார். பின்னர் அந்த கட்டிடம், தாமிரத்தால் ஆன மின் ஒயர்கள் தாயாரிக்கும் தாமிர ஆலை என்பது, பின்னர் தான் தெரிய வந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன் எடுத்தனர். மேலும், இந்த ஆலைக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிகிறது, ஆலைக்கு மின் இணைப்பு வழங்க, நேற்று மின்வாரியத்தினர் வந்த போது, அவர்களை முற்றுகையிட்ட பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் பணிகளை முடித்து விட்டு சென்றனர்.

இதையடுத்து, தொடர்ந்து இன்று அந்த ஆலை முன் கூடிய அப்பகுதி மக்கள், தாமிர ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதானல் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On: 20 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு