/* */

குமரியில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரியில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி தினசரி காய்கறி சந்தை, அப்டா மார்க்கெட் என மாவட்டம் முழுவதும் 12 க்கும் மேற்பட்ட காய்கறி சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஓசூர், மதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பாவூர்சத்திரம் உள்ளிட பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல டன் காய்கறிகள் வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் வரை விலை உயர்ந்து காணப்பட்ட காய்கறிகள் விலை தற்பொழுது மூன்று மடங்கு வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மாதம் கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் தற்பொழுது 60 ரூபாய்க்கும், வெள்ளரிகாய் 70 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கும், மாங்காய் 200 ரூபாயில் இருந்து 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று பீன்ஸ் 90 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 80 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கும், உருளை கிழங்கு 60 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கும், புடலங்காய் 50 ரூபாயில் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் சுபமூகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதாலும் காய்கறி விலை குறைந்து உள்ளதாகவும் இந்த விலை குறைவு சித்திரை மாதம் வாரை தொடரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தார்கள். அனைத்து விதமான காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 12 March 2022 1:15 PM GMT

Related News