குமரியில் போக்குவரத்து விதி மீறல்: ஒரே நாளில் 2608 பேர் மீது வழக்கு

குமரியில் போக்குவரத்து விதி மீறல்: ஒரே நாளில் 2608 பேர் மீது வழக்கு
X

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போலீசார்.

குமரியில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக ஒரே நாளில் 2608 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவது விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயங்குவதாகவும், இதனால் விபத்துகள் அதிகரித்து வருவதோடு, அதிவேக வாகனங்களால் சரியாக செல்லும் வாகனங்களும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில் விதிமீறல் வாகனங்கள் மீது, தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட எல்லைகள் மற்றும் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 2608 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!