கூடங்குளம் கழிவை புதைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

கூடங்குளம் கழிவை புதைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
X

நாகர்கோவில் குமரிமாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இன்று நடைபெற்றது.

கூடங்குளம் கழிவுகளை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, குமரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்க்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில், மாநாட்டை முன்னிட்டு அதற்கு முன்னோட்டமாக இன்று நாகர்கோவில், குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது

இந்த மாநாட்டில் கூடங்குளம் அணுக்கழிவுகளை, அந்த வளாகத்திலேயே புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்படி செய்தால் தென்மாவட்டங்களில், குறிப்பாக புற்றுநோய் அதிகமாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்து மேலும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா