குமரியில் நேரடி மற்றும் ஆன் லைன் டோக்கன் முறைகளால் பொதுமக்கள் குழப்பம்
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தினம் தினம் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இதனிடையே 4 நாட்களுக்கு பின்னர் இன்று மாவட்டம் முழுவதும் 49 மையங்கள் மூலமாக 17000 தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவித்த மாவட்ட நிர்வாகம் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 16 மையங்களில் ஆன் லைன் டோக்கன் முறை மற்றும் நேரடி டோக்கன் முறையை அறிவித்தது.
இதற்காக அதிகாலை முதல் தடுப்பூசி மையங்களில் கால் கடுக்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் வேதனை அடைந்ததோடு டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்,
இதே போன்று 33 மையங்கள் மூலமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக 4950 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தேவையான முன்னேற்பாடுகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை தவிர்த்துள்ளனர்.
ஏற்கனவே குளறுபடிகள் காரணமாக பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள மாவட்ட நிர்வாகம் 2 முறைகளில் டோக்கன் என்பதை மாற்றி ஒரு முறையில் டோக்கன் வழங்க வேண்டும்.
நோய் தாக்கத்தை கருத்தில் கொண்டு எளிய முறையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu