அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் - டாரஸ் லாரிகள் பறிமுதல்
கோப்பு படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் இருந்து அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான டாறஸ் லாறிகள் சென்று வருகின்றன. அதிக பாரத்துடன் இந்த டாறஸ் லாறிகள் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது.
தற்போது, நீண்டநாள் போராட்டத்திற்கு பின், சேதமடைந்த நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் சேதமடையாமல் இருக்கவும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும் அதிக பாரத்துடன் வரும் டாறஸ் லாறிகளை கண்காணித்து பறிமுதல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் டாறஸ் லாறிகளை சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் தக்கலையில் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 10-டாறஸ் லாறிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பிடிப்பட்ட ஒவ்வொரு டாறஸ் லாறிக்கும் 25-ஆயிரம் முதல் 30- ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu