அகஸ்தீஸ்வரத்தில் பெரியார் படம் அவமதிப்பு பற்றி போலீசார் விசாரணை

அகஸ்தீஸ்வரத்தில் பெரியார் படம் அவமதிப்பு பற்றி போலீசார் விசாரணை
X

அவமதிப்பு செய்யப்பட்ட பெரியார் படம்.

அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டு இருந்த பெரியார் படம் அவமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே ஒற்றையால் விளை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புற சுவரில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் உருவப்படங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளியின் முன் வரையப்பட்டு இருந்த பெரியார் படத்தின் மீது மர்ம நபர்கள் ஆயில் பெயின்டை ஊற்றி அவமதித்து உள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் இதில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story