தொடர் கனமழையால் குளுமைக்கு திரும்பிய குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால், வெப்பம் தணிந்து குளுமை திரும்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய பெய்த கனமழையால், வெப்பமான சூழல் முழுமையாக தணிந்து, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.

நீண்ட நாட்களாக வெப்பச் சலனத்தால் அவதியுற்று வந்த பொதுமக்கள் கனமழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையில் இருந்து உபரி நீர் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!