கன்னியாகுமரி: பெண் தவறவிட்ட பணப்பை- ஒப்படைத்த நேர்மை இளைஞர்!

கன்னியாகுமரி: பெண் தவறவிட்ட பணப்பை- ஒப்படைத்த நேர்மை இளைஞர்!
X

பெண் தவறவிட்ட பணப்பையை இளைஞர் ஒப்படைத்த காட்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை இளைஞர் காவல்துறை துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திக்கணாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளியாக்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீழே ஒருபணப்பை கிடந்ததை கண்டார். அதனை எடுத்து கொண்டு குளச்சல் காவல் நிலையம் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அங்கு பணியில் இருந்த குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சணல்குமார், பணப்பையை பிரித்து பார்த்த போது அதில் ரூ.12,825 இருந்தது.

இதுகுறித்து விசாரணை செய்தபோது, மாத்திரவிளையை சேர்ந்த சுபா என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தார். அந்த பெண்ணை வரவழைத்து. பணப்பையை ஒப்படைத்தனர். பணப்பையை பத்திரமாக எடுத்து ஒப்படைத்த அந்த நேர்மையான இளைஞரை காவல் அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பாராட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!