கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!
X

மீன் கோப்பு படம்


கன்னியாகுமரியில்சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை மண்டைக்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கட்டுமரம், வள்ளம், மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலையை கட்டுபடுத்த அரசு முழு ஊரடங்கு அறிவித்த நிலையிலும் டவ்-தே புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

இதனிடையே நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்த நிலையில் மீனவர்களுக்கும் மீன்பிடித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கட்டுமரம், வள்ளம், மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று அதிக அளவில் மீன்களுடன் கரை திரும்பினர்.

மீனவர்கள் அதிக அளவில் மீன்களுடன் கரை திரும்பிய நிலையில் தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் குவிந்து மீன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் போலீசாரும் மீன்வளத்துறையினரும் மீன் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!