கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக

கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக
X
குமரியில் திராவிட கட்சிகளை ஓரம் கட்டி இரணியல் பேரூராட்சியில் பாஜக தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்றது.

தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

அதன்படி 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 8 மையங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதனிடையே இரணியல் பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் அங்கு மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் இரணியல் பேரூராட்சி மக்கள் மட்டும் திராவிட காட்சிகளை புறக்கணித்து உள்ளனர். இது அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.

12 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ள நிலையில் 2 சுயேட்சை வெற்றியாளர்களும் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளனர். மீதம் உள்ள ஒருவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!