பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு- இருவர் கைது

பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு- இருவர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு மற்றும் வீட்டை உடைத்து திருட்டு என பல்வேறு குற்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செயின்பறிப்பு, வீட்டை உடைத்து திருட்டு என பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது.இதில் தொடர்புடையவர்களை விரைந்து கண்டுபிடிக்க கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி., பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி., விஸ்வேஷ் சாஸ்திரி மேற்பார்வையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப் இன்ஸ்பெக்டர் குமார், தலைமையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் லட்சுமிபுரம் சந்திப்பில் சந்தேகத்திற்கிடமாக முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் மேக்கா மண்டபத்தை சேர்ந்த அபிராம்(27) மற்றும் பரம்பையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (43) என தெரியவந்தது.

மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் செயின் பறிப்பு, வீட்டை உடைத்து திருட்டு என பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான 117 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ. 77 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்பு குற்றவாளிகள் மீது குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த பாேலீசாரை மாவட்ட எஸ்பி., வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்