100 கனரக வாகனம் , 2384 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் : குமரி காவல்துறை

100 கனரக வாகனம் , 2384 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் : குமரி காவல்துறை
X

சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 100 கனரக வாகனங்கள் மற்றும் 2384 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதி வேகமாக கனரக வாகனங்கள் வருவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர் புகார்கள் வந்தது.

இதனை தொடர்ந்து விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஒரே நாளில் நடைபெற்ற வாகன சோதனையில், அதிக பாரம் ஏற்றி வேகமாக வந்த 100 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஒட்டிய 2384 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே குளச்சல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய சுபாஷ்(24), வைகுண்ட வினுகுமார்(26), மற்றும் அஜித்குமார்(33) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் சூதாடிய கார்டு மற்றும் 9000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது