குமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் போராட்டம்

குமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் போராட்டம்
X

கன்னியாகுமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

குமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் படிவம் வழங்காமல் அழைக்களிப்பதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கடந்த 15 தேதி அறிவித்திருந்த நிலையில் அருமனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பலநாட்களாக உறுப்பினர் படிவம் வாங்க வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு படிவம் கொடுக்காமல் அழைக்கழிக்கபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று படிவம் வாங்க வந்த விவசாயிகளிடம் கூட்டுறவு சங்க செயலாளர் படிவம் கொடுக்காமல் மீண்டும் அழைக்களித்ததால் அவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுப்பினர் படிவம் தரும்வரை அங்கிருந்து எழுந்து செல்லமாட்டோம் என கூறி அங்கேயே அமர்ந்து இருந்தனர், இதை அறிந்த பாஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாக அங்கே குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், அதிகாரிகள் மீண்டும் அழைக்களிக்கும் செயலில் ஈடுபட்டால் மிக பெரிய போராட்டங்களை முன்னெடுப்போம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture