குமரி-முழு ஊரடங்கில் சிறப்பு அனுமதி- கொரோனா பரவலுக்கு வித்திட்ட மீன் வியாபாரம்
தமிழகத்தில் கொரோணா தொற்று தீவிரமடைந்த நிலையில் அதை கட்டுபடுத்த தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கொரோணா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு மீன் வியாபாரம் களை கட்டியது.
ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரிகள் குவிந்து இருப்பதாக புகார்கள் எழுந்ததோடு பலருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால் மீன் பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் மீன் பிடி துறைமுகம் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வியாபாரிகள் செல்ல தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சில நிபந்தனைகளோடு துறைமுகத்திற்குள் சென்று வியாபாரிகள் மீன் வாங்குவதற்கு மீன்வளத்துறை சிறப்பு அனுமதி அளித்தது.
இதனிடையே வழக்கமாக காணப்படும் ஏலம் விடப்படும் முறை தற்போது இல்லை என்றாலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் முக கவசம் இன்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடியதால் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டது.
தீவிர ஊராடங்கில் சாதாரண காய்கறி வியாபாரிகளுக்கும் சில்லரை வியாபாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுக்கடங்காத கூட்டத்துடன் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் வியாபாரம் கொரோணாபரவளுக்கு வித்திடும் வகையில் அமைந்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu