43 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி, ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

43 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி, ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

கன்னியாகுமரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

குமரியில் 43 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதனை செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெறாத நிலையில் இன்று 850 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி 3 சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டன.

முதற்கட்ட கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் 2 ஆம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வசதியாக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாலை 3 மணி முதலே தடுப்பூசி மையங்களின் முன் கூடிய பொதுமக்கள் இருக்கையில் அமர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி எடுத்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story