தடுப்பூசி போடும் முகாம்களில் கொரோனா பரவும் அபாயம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தடுப்பூசி போடும் முகாம்களில் கொரோனா பரவும் அபாயம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
X

தடுப்பூசி போடும் முகாம்களால் கொரோனா பரவும் அபாயம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றது, இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அணுகுமுறை இல்லாததால் தடுப்பூசி போடும் மையங்களில் பெருமளவில் கூட்டம் கூடி அதனாலேயே நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக எத்தனை டோஸ் மருந்துகள் இருப்பில் உள்ளது என்பதை தெரிவிக்காமல் வெறுமனே தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்படுவதால் காலை முதலே தடுப்பூசி போடும் மையங்களில் கூடும் பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தடுப்பூசிகள் தீர்ந்து விடும் என்ற பயம் காரணமாகவும் நீண்ட நேரம் காவல் நிற்கும் நிலை காரணமாகவும் பொதுமக்கள் முண்டியடிப்பதால் பாதுகாப்பான இடைவெளி என்பது கேள்விக்குரியதாக ஆகி உள்ளது.

இதனிடையே அரசின் முறையான அணுகுமுறை இல்லாததால் பாதுகாப்பு விதிமுறைகள் காணாமல் போய் உள்ளதோடு தடுப்பூசி போடும் முகாம்கள் கொரோனா நோய்த்தொற்றை பரப்பும் முகாம்களாக ஆகி உள்ளதாக சமூக ஆர்வளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் தடுப்பூசி போடுவது நோய் தொற்றை தடுப்பதற்கு தான், தொற்றை பரப்புவதற்கு இல்லை என்பதை உணர்ந்து பதிவு முறையை கொண்டு வந்து தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future