மூன்று குழந்தைகளின் தாயார் மாயம் - போலீசார் விசாரணை.

மூன்று குழந்தைகளின் தாயார் மாயம் - போலீசார் விசாரணை.
X
மாயமான மனைவி -கணவன் கண்ணீர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை காணவில்லை என கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவரது மனைவி 23 வயதான சுகர்ணா. இந்த தம்பதியருக்கு லீனியா, லினிசா ,லினிசன் என மூன்று குழந்தைகள் உள்ளது . இந்நிலையில் நேற்று முதல் சுகர்ணா திடீரென மாயமாகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுகர்ணாவை அவரது கணவர் நெல்சன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுகர்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!