உத்திரமேரூர் அருகே கல்குவாரி கனரக லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி

உத்திரமேரூர் அருகே கல்குவாரி கனரக லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி
X
உத்திரமேரூர் அருகே கல்குவாரி கனரக லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை புறநகர் பகுதிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்களில் முக்கியமாக விளங்கும் ஜல்லிக்கற்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் இருந்து பெறப்பட்டு ,200 க்கும் மேற்பட்ட கல் அரவை நிலையங்களில் அரைக்கப்பட்டு பல்வேறு அளவு வகைகளில் 24 மணி நேரமும் கனரக லாரிகள் மூலம் கொண்டு சென்று சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் எந்நேரமும் சாலையில் கனரக லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. கனரக லாரிகளை செலுத்தும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டுமே புறநகர் பகுதிகளை அடைய முடியும் என்பதால் எப்போதுமே அதி வேகமாக செல்கின்றனர் என குற்றச்சாட்டு தமிழ் முழுவதும் பொதுவாகவே உள்ளது. மேலும் லாரிகளால் ஏற்படும் புழுதிகளால் பின்வரும் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலையும் இதில் கவனக் குறைவு ஏற்பட்டு விபத்தில் சிக்கி தங்களது உடல் மற்றும் உறவுகளை இழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , உத்திரமேரூர் - செங்கல்பட்டு செல்லும் சாலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது லாரி மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சமீபகாலமாக உத்திரமேரூர் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய கல் குவாரிகளால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்று சூழல் மற்றும் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், அந்தக் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் இதனை சிறிதளவு கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வந்து மெல்ல மெல்ல வழக்கம் போல் ஓட்டுநர்கள் அதி வேகத்தை செயல்பட துவங்கி விடுகின்றனர்

அந்த வகையில் , இன்று உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் விஜய் (வயது 22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் உத்திரமேரூர் நோக்கி வந்துகொண்டிருந்த பொழுது, உத்திரமேரூர் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் எதிரே இருசக்கர வாகனத்தின் மீது கல்குவாரி லாரி மோதியது, இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால் விஜய்யின் உறவினர்கள் பிரேதத்தை கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் சடலத்தை கைப்பற்றினர். பின்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உத்திரமேரூரில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!