வடிவேலு பட பாணியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது
இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சீனிவாசன்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பவித்ரா. இவர் அப்பகுதியில் உள்ள மெய்யூர் ஓடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
பவித்ரா இன்று வழக்கம் போல பள்ளிக்கு தனது சைக்கிளில் சென்றுள்ளார், அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பவித்ராவின் இடுப்பை கிள்ளி விட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா சைக்கிளை விட்டு கீழே இறங்கி சாலை ஓரத்தில் இருந்த கருங்கல் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு நின்றுள்ளார், மீண்டும் அந்த இளைஞர் பவித்ராவை நோக்கி வரவே அவரை கல்லால் தாக்கியுள்ளார் பவித்ரா. அந்தக் கல் இளைஞரின் ஹெல்மெட்டில் பட்டு கீழே விழுந்துள்ளது.
மீண்டும் மூன்றாவது முறையாக பவித்ராவை நோக்கி அந்த இளைஞர் வந்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட பவித்ரா தனது சைக்கிளில் கூச்சலிட்டவாறு வேகமாக சென்று அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் அங்கிருந்து தப்பித்துச்செல்ல நினைத்த அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் துரத்திப் பிடித்து, நைய புடைத்து சாலவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர் சென்னை கோவிலச்சேரி, அன்னை தெரேசா நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் தமிழரசன் (வயது 32) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் உத்திரமேரூர் அடுத்த வாடாத ஊரில் நந்தகுமார் என்பவர் வைத்திருக்கும் கோழி பண்ணைக்கு தீவனங்கள் எடுத்து வந்தது தெரிய வந்தது.
தமிழரசன் மீது பெண்ணை மானபங்கம் படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு அவருடைய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப் பகலில் சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியை வாலிபர் ஒருவர் இடுப்பை கிள்ளிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சினிமா காமெடி நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில் இடுப்பு எடுப்பாக இருந்தால் கிள்ள தான் செய்வார்கள் எனக் பஞ்சாயத்தில் கூறி பொதுமக்களிடம் அடி வாங்கும் காட்சி சம்பவம் தான் நேற்று அங்கு அரங்கேறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu