வாலாஜாபாத் : டென்னிகாய்ட் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற மாணவிகள்
மாவட்ட டென்னிகாய்ட் போட்டி இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
2022 -23 ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது.
இதில் டென்னிகாய்ட் - 14 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் எஸ்.கைரவி - ஆர்.வெற்றிசெல்வி ஆகியோர் மாவட்ட அளவில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.டென்னிகாய்ட் பெண்கள் ஒற்றையர் - 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.கைரவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் அடுத்து நடைபெறவுள்ள மாநில அளவிளான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகி சாந்தி பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu