ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா
ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கி உள்ளது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியாகவும் , உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகள் பேரூராட்சிகளாகவும், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளாகவும் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல் அலுவலராக பிரேமா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த காலங்களில் மீனம்பாக்கம், ஆரணி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலராகவும் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிப்ரவரி 28ம் தேதிபணி ஓய்வு பெறும் நிலையில் இவரை பேரூராட்சிகளின் இயக்குனர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இது குறித்த உத்தரவில் பிரேமா சிறப்பு நிலை பேரூராட்சிகளாக செயல்பட்ட வாலாஜாபாத், மீனம்பாக்கம், திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் கருங்குழி, மாங்காடு, மாடம்பாக்கம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் வரி வசூல் , குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்டவைகளுக்கான டெண்டர் முறைகளை சரியாக பின்பற்றவில்லை எனவும், பேரூராட்சி நிதிகளை தவறுதலாக பயன்படுத்தியதாகவும் இதனால் அவர் பணியாற்றி பேரூராட்சிகளின் மூலம் 10 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 614 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை சஸ்பெண்ட் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டது அரசு அலுவலர்களுடைய பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதியும் நிர்வாக சீர்கேட்டை களையவும் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu