வாலாஜாபாத் : நில அளவை செய்ய ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணண். இவர் மாவட்ட பாஜக விவசாய அணி தலைவராக செயலாற்றி வருகிறார்.
சரவணன் தனது புஞ்சை நிலத்தை நில அளவை செய்ய வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 2019 செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருட மேலாக கொரோனா பரவல் காரணமாக நில அளவை தடை ஏற்பட்டுள்ளது. சரவணன் பலமுறை வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நில அளவையர் இந்துமதியை சந்தித்து இது குறித்து கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தொலைபேசியில் பதில் அளிப்பதாக கூறிய இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதி இடம் பேசிய போது ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்த சரவணன் இரு தினங்களுக்குப் பிறகு முதல் தவணையாக ரூபாய் பத்தாயிரம் தனது உதவியாளரிடம் அளிக்க கூறியுள்ளார்.
லஞ்சம் அளிக்க விரும்பாத சரவணன் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தை புகார் தெரிவித்துள்ளார். அவர்களது ஆலோசனைப்படி இன்று மாலை 3 மணி அளவில் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்து சரவணன் ரசாயனம் தடவிய ரூபாய் பத்தாயிரம் அளித்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் தறையினர் கையும் களவுமாக இந்துமதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக கூறி இளையனார் வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பட்டா வழங்கியமைக்கு ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வாங்கியதாக அப்போது புகார் எழுந்தது. போதிய ஆதாரம் இன்மை காரணமாக அப்போது இதிலிருந்து இந்துமதி தப்பியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu